அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்த வேளை
அவனிடம் காட்டவில்லை அறிவு வாளை
பலரால் கிடைத்த சுதந்திரத்தை பாழடித்து
தேச பக்தர்களின் உணர்சிகளை வீணடித்து
நமக்குள்ளே காட்டுகிறாய் சாதி வேற்றுமையை
கண்கள் மூடியே காலங்கள் சென்றன
அறிவின்மையும் நம்மை வென்றன
சுதந்திரம் எளிதில் பெற்றோம் என்று
சுகமாய் சிரிக்கிறாய் தனிமையில் நின்று
காரணம் என்னவோ சமுகம் தானோ
புத்தகங்கள் பலவற்றை புத்தியால் படிக்கிறாய்
உலகத்தை உறவாக்க ஏனோ மறக்கிறாய்
கட்டுப்பாடுகள் இருந்தும் கள்வனாய் கிடக்கிறாய்
முன்னேறுவதை தவிர்த்து மூடனாய் இருக்கிறாய்
இனி ஒரு விதி செய்வோம்
வீணாய் பேசி ஊர்கதை அளந்து
வேண்டியவற்றை போக்கில் மறந்து
உண்கிறாய் தினமும் நிம்மதி விருந்து
தடுக்கும் தடைகளை தாராளமாய் தள்ளி
வெல்வோம் நாம் தமிழனென்று சொல்லி
பகுத்தறிவு மனிதா பாராமுகமாயிருப்பதேன்
ஆறறிவு மனிதா மனிதநேயமெங்கே
தமிழனின் புரட்சியை தலைதூக்கிக் காட்ட
பழையன ஒழித்து புதியன புகட்ட
எழுச்சிமிகு தமிழனே விழித்தெழு …
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக