பத்துமாதம் சுமந்து பாதுகாப்பாய் பார்த்தாள்
பிறந்தவுடன் வியந்து பெறுமையாய் நின்றாள்
கனவுகள் எல்லாம் கண்படக் கண்டு
நிம்மதியாய் நின்று பேரன்பு கொண்டாள்

அழுகின்ற போதெல்லாம் அன்போடு அனைத்து
இரத்தத்தை பாலாக்கி சுத்தமாய் தந்தாள்
தன் உறக்கம் பாராமல் நம் உறக்கம் பார்ப்பாள்
கண்கள் மூடினாலும் கனிவு என்னவோ நம் மேல்தான்
வேதனைகள் பலவற்றை சாதனையாய் மாற்றி
துன்பத்தை துடைத்து இன்பத்தை ஆற்றி
காதல் கனியை கடைசிவரை அளிப்பாள்
காலங்கள் சென்றாலும் பாரங்கள் தீருமோ
வளர்ந்தாலும் நம்மை வாழ்த்திடுவாள்
முன்னேற நல்லெண்ணம் கொண்டிடுவாள்
உலக உண்மையை எடுத்துரைப்பாள்
உள்ளத்து உணர்ச்சிகளை கண்டெடுப்பாள்
தெய்வத்தைப் போல் தோன்றிடுவாள்
மனக்குறையை எப்போதும் போக்கிடுவாள்
இத்தனை பாசமும் இருக்குபடியே
இறுதிவரை தொடரும் இல்லைமுடிவே …
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக