( நேரிசை ஆசிரியப்பா )
உலகின் ஆசையை உதறியேத் தள்ளி
நிலத்தில் வாழ்வார் நிலையாய் என்றும்
உறவினை மறந்தே உண்மையில் சிறந்து
பறக்கும் மனதை படித்தார் இன்றும்
நல்ல வழிதனில் நலமாய் நின்று
வல்லவர் போன்றே வலிமை பொற்றாய்
ஆணவம் என்னும் அகங்காரம் அழித்து
பணத்தை வெல்ல பதவி அடைந்தாய்
பெற்ற அருளை பேறுபெற தராமல்
முற்று புள்ளியாய் முடிவே கொண்டாய்
மக்களை வாழ்த்த மந்திரம் சொல்லி
சக்கையாய் பிழிந்து சரக்கை வென்றாய்
மக்கள் தனது மதியை இழந்து
வீக்கம் போன்றே வீரம் பேசியே
மூடனாய் என்றும் மூழ்கிப் போனார்
வேடனிடம் சென்று வெற்றிடம் ஆகி
அன்பர் என்றருளிலே தாமும்
தன்னை மீறியே தர்மம் அளித்தார்
இன்றே சேர்ந்து இருளை ஒழிக்க
நன்றே செய்வோம் நின்றே நாமும்
உறவில் இறைவன் உளமதில் இருக்க
துறவி எதற்க்கு துணிந்த நமக்கு
மனதை நாளும் மதித்தால்
தினமும் பெறலாம் திரண்ட நன்மையே …
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக