செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கக்கன் எனும் குணக்குன்று





தமிழக அரசியலில் புதியதோர் உதயம்
அன்று முதல் நீதான் மக்களின் இதயம்
துணிந்தே செய்தாய் தூக்கமின்றி எதையும்
மக்களிடம் வளந்த்து உன்னுடைய விதையும்

மாணிக்கப் பிறப்பாய் மண்ணிலே வந்தாய்
சீரிய சிந்தனை சித்தத்தில் கொண்டாய்
உண்மையில் என்றும் ஊறியே நின்றாய்
அன்பை அனைத்தும் அருளால் வென்றாய்


 சூரியனாய் பொய்யை சுட்டெரித்தாய்
புறப்பேச்சை தள்ளியே விட்டொழித்தாய்
சூழ்ச்சி முடிச்சுகள் கட்டவிழ்த்தாய்
அறிவுக்கூர்மையால் வென்றெடுத்தாய்

எளிமையை ஏணிப்படியாய்க் கொண்டு
அரசியல் பணியில் நீ செய்த தொண்டு
மக்களின் மனதில் நிச்சயம் உண்டு
என்றும் வாழும் உன் புகழ் நின்று …

துறவியர்



 ( நேரிசை ஆசிரியப்பா )

உலகின் ஆசையை உதறியேத் தள்ளி
நிலத்தில் வாழ்வார் நிலையாய் என்றும்
உறவினை மறந்தே உண்மையில் சிறந்து
பறக்கும் மனதை படித்தார் இன்றும்
நல்ல வழிதனில் நலமாய் நின்று
வல்லவர் போன்றே வலிமை பொற்றாய்

ஆணவம் என்னும் அகங்காரம் அழித்து
பணத்தை வெல்ல பதவி அடைந்தாய்
பெற்ற அருளை பேறுபெற தராமல்
முற்று புள்ளியாய் முடிவே கொண்டாய்
மக்களை வாழ்த்த மந்திரம் சொல்லி
சக்கையாய் பிழிந்து சரக்கை வென்றாய்


மக்கள் தனது மதியை இழந்து
வீக்கம் போன்றே வீரம் பேசியே
மூடனாய் என்றும் மூழ்கிப் போனார்
வேடனிடம் சென்று வெற்றிடம் ஆகி
அன்பர் என்றருளிலே தாமும்
தன்னை மீறியே தர்மம் அளித்தார்

இன்றே சேர்ந்து இருளை ஒழிக்க
நன்றே செய்வோம் நின்றே நாமும்
உறவில் இறைவன் உளமதில் இருக்க
துறவி எதற்க்கு துணிந்த நமக்கு
மனதை நாளும் மதித்தால்
தினமும் பெறலாம் திரண்ட நன்மையே …

திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஆயி மண்டபம்



           இருநூறு ஆண்டு கால பழைமை 

      அதுவே ஆயிமண்டபத்தின் இனிமை



           அதன் நினைவோ தேவதாசி பதுமை

         அது இன்றும் இருப்பதோ புதுமை …

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

மதவெறி





அகிம்சை வழியில் அமைதியாய் சென்றோம்
வீர விளக்கில் சுடராய் நின்றோம்
அடிமை விலங்கினை அறிவால் வென்றோம்
அந்நியனை வெளியேற்றி நாட்டை கைப்பற்றி
ஒற்றுமை பட வந்தோம்
உணர்ச்சிகள் பொங்கி உண்மையைக் கண்டும்
உணர்வை இழந்து உறங்கி விட்டோம்
மதவெறி என்னும் மயக்கத்தில்
மதம் பிடித்து நின்றதனால்
எத்தனை எத்தனை பிரிவுகள்
இயற்கை வாழ்வதோ மனிதனுக்காக
மனிதன் வீழ்வது யாருக்காக
யுத்தத்தில் வீழ்ந்தோம்
இரத்தத்தில் மிதந்தோம்
இருந்தும் மனம் மறக்கவில்லை மதவெறியை
நீ எப்போது மூடுவாய் உன் திரையை ...